பாகிஸ்தான் சிறையில்தான் ஹஃபீஸ் சயீது கடைசிவரை இருப்பாரா மும்பை தாக்குதல் சந்தேக நபர்

தீவிரவாத அமைப்பு எனும் குற்றச்சாட்டின்கீழ் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டது.


161 பேர் உயிரிழந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் இவர் முக்கிய பங்காற்றினார் என்ற குற்றச்சாட்டும் ஹஃபீஸ் சயீத் மீது இருக்கிறது.


பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவரை அமெரிக்கா மற்றும் ஐ.நா, சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தன. ஹஃபீஸ் சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என 2014இல் அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.


சரி. அவரை சிறையில் தள்ள இவ்வளவு காலம் ஆனது ஏன்? அவர் சிறையிலேயே இருப்பாரா? இல்லை வெளியே வந்துவிடுவாரா?


இந்த கேள்விக்கான பதில் சிக்கலானதுதான். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர் ஹஃபீஸ் சயீத்.


சயீதுக்கு இப்போது தண்டனை வழங்கப்பட்டது ஏன்?


2000ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படுவது, அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம்.


மேலும் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியிலில் சேர்க்கப்படலாம் என்று சர்வதேச பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மற்றும் பணம் கையாடல் செய்யப்படுவதை கண்காணிக்கும் ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் எனும் பன்னாட்டு அமைப்பு (FATF) எச்சரிக்கை விடுத்துள்ளதும் இதற்கு காரணமாக இருக்கலாம். பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை FATF கண்காணித்து வருகிறது.



947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரும்பாலும் ராணுவத்தால் ஆட்சி செய்யப்பட்ட பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது.


FATF அமைப்பால் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்நாட்டிற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படலாம்.


இந்த நிகழ்வுகளை எல்லாம் இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. தற்போது ஹஃபீஸ் சயீதுக்கு சிறை தண்டனை அளித்துள்ளதை அமெரிக்க வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது.