குஷ்பு மகளா இது, நம்பவே முடியலயே: வியக்கும் ரசிகர்கள்

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவின் இளைய மகள் அனந்திதா குண்டாக இருந்தார். 17 வயதாகும் அந்த பிள்ளையை சிறுமி என்றும் பாராமல் உடல் எடையை சொல்லிக்காட்டி சமூக வலைதளங்களில் பலர் அசிங்கப்படுத்தி வந்தார்கள். குஷ்பு தன் மகள்களுடன் ஆசையாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடும்போது எல்லாம் வெயிட்டை பற்றி கமெண்ட் போட்டு அவரின் மனதை காயப்படுத்துவார்கள்.


தன்னை கிண்டல் செய்த அத்தனை பேரையும் வியக்க வைத்துள்ளார் அனந்திதா. அவர் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார். தான் ஒல்லியான பிறகு எடுத்த புகைப்படத்தை அந்த சிறுமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த திரையுலக பிரபலங்களோ, அனி ரொம்ப அழகாக இருக்க. வாவ், வெயிட்டை குறைத்து செல்லம் க்யூட்டாக இருக்கிறாய் என்று பாராட்டியுள்ளனர்.