Vijay அது ஏன் விஜய்க்குன்னே இப்படி நடக்குது: பாவம், மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் மாஸ்டரின் டிராக் லிஸ்ட் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது தான் மாஸ்டர் பட பாடல்களின் பட்டியலா இல்லை பொய் தகவலா என்று கேட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள்.



முன்னதாக மாஸ்டர் படத்தின் வீடியோ ஒன்று கசிந்தது. அதன் மூலம் விஜய் சேதுபதியின் லுக் படக்குழு வெளியிடும் முன்பு அனைவருக்கும் தெரிந்துவிட்டது. விஜய் படங்களுக்கு என்றே இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடக்கிறது. எதுவும் கசியாமல் இருக்க படக்குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் தாண்டி ஏதாவது நடந்து விடுகிறது.



 


மூன்றாவது லுக்


மாஸ்டர் டிராக் லிஸ்ட் இது தானா என்பதை படக்குழு உறுதி செய்யவில்லை. முன்னாக வெளியான மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இதை அல்லவா முதலில் வெளியிட்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள். விஜய் சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக இந்த போஸ்டர் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்பொழுது வெளியான போஸ்டரில் விஜய் மட்டுமே இருந்தார்.