சென்னை: பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு கவிஞர் வைரமுத்துவை அழைத்த நடிகர் கமல்ஹாசனை பாடகி சின்மயி சரமாரியாக சாடியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 7ஆம் தேதி தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது அப்பாவுக்கு சிலை திறந்தார் கமல்ஹாசன். அடுத்த நாளே சென்னையில் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்த கமல்,
அங்கு இயக்குநர் கே பாலச்சந்தருக்கு சிலை வைத்தார். இந்த சிலையை ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர்